Skip to main content

ஐ.பி.எல் கொண்டாட்டமாக ஹாட்ஸ்டார் அறிவித்த அதிரடி சலுகை!!!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

hotstar

 

 

ஐபிஎல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஹாட்ஸ்டார் நிறுவனம், புதிய வாடிக்கையாளர்களுக்கு அதிரடிச் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

 

ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்தாண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை தன்னுடைய செயலி மூலம் நேரலையாக ஒளிபரப்பும் உரிமையைக் கொண்டுள்ளது. இன்று 13-வ து ஐபிஎல் தொடரின் முதல் போட்டி தொடங்க இருக்கிறது. சென்னை மற்றும் மும்பை அணிகள் இப்போட்டியில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த ஐபிஎல் தொடரைக் கொண்டாடும் விதமாக புதிய வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் அதிரடியான சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

 

அதன்படி, புதிய பயனாளர் ஒரு வருடத்திற்கான (VIP) சந்தா தொகையை செலுத்தும்போது, கூடுதலாக ஒரு மாத காலம் இலவசமாக பயன்படுத்தும் உரிமையை அளித்துள்ளது. வழக்கமாக ஒரு வருடத்திற்கான (VIP) சந்தா தொகையை செலுத்தும்போது, 12 மாத காலம் மட்டுமே பயன்படுத்த முடியும். புதிய வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் கவர்ந்திழுக்கும் விதமாக வெளியிட்டுள்ள இந்த சலுகையானது இந்த வாரத்தின் இறுதி நாட்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது. ஒரு வருடத்திற்கான (VIP) சந்தா தொகையானது இந்திய மதிப்பில் 399 ரூபாய் ஆகும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உப்பு புளி காரம்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
hotstar new series uppu puli kaaran  first look released

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், அடுத்து வழங்கும் புதிய சீரிஸ், 'உப்பு புளி காரம்'. இதில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகள் பற்றிய கதையுடன், இந்த சீரிஸ் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ளது. இயக்குநர் எம் ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். ஷேக் என்பவர் இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில் இந்த சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் இந்த சீரிஸ் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் சமீபத்திய வெளியீடுகளான ஹார்ட் பீட், மத்தகம் மற்றும் லேபிள் சீரிஸ்கள், வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

‘பிரேமலு’ ஓடிடி அப்டேட் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
premalu ott release update

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான மலையாள படம் பிரேமலு. இப்படத்தை ஃபஹத் ஃபாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகிய நான்கு நடிகர்கள் தயாரித்திருந்தனர். விஷ்ணு விஜய் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் மொத்தம் ரூ.135 கோடி வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக வசூல் செய்த மலையாளப் படங்களில் டாப் 5 இடங்களில் ஒன்றாக இப்படம் இருக்கிறது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் காரணமாக தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு கடந்த மாதம் 8 ஆம் தேதி வெளியானது. அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாகத் தமிழிலும் கடந்த மாதம் 15ஆம் தேதி வெளியானது. இங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. 

premalu ott release update

இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகின்ற 12 ஆம் தேதி (12.04.2024) டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் இப்படம் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டரை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நாயகி மமிதா பைஜு.