Horrifying video footage of a helicopter crashing into a circle

Advertisment

ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விண்ணில் பறந்து கொண்டிருந்த நிலையில் திடீரென நிலைதடுமாறி வட்டமடித்து கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் கொலம்பியாவில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் நான்கு அதிகாரிகள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் குயிட்டோபகுதியில் ராணுவத் தளவாடங்களை கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் அந்நாட்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்த பகுதியில் பறந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நடுவானில் நிலைதடுமாறி சுழன்று வட்டமடித்தது. இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் அதனை வீடியோ காட்சிகளாக பதிவு செய்தனர். தொடர்ந்து வட்டமடித்த ஹெலிகாப்டர் நிலைதடுமாறி சுற்றிக்கொண்டே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இந்த திடீர் விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.