Skip to main content

லட்சக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டம்... கலவரத்தில் முடிந்த துயரம்...

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

குற்றம்சாட்டப்பட்டவர்களை தேவைப்பட்டால் சீனாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சீனாவின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஹாங்காங் சட்டத்தில் திருத்தும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனை எதிர்த்து அந்நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

 

hongkong people protest end up in riots

 

 

கொலை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத்திருத்தம் பலரையும் அரசியல் ரீதியாக பழிவாங்க பயன்படுத்தப்படலாம் எனவும், இது பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் என கூறியும் அந்நாட்டு மக்கள் இந்த சட்ட திருத்தத்தை கடுமையாக எதிர்த்த வருகின்றனர்.

புதிய சட்ட திருத்தம் குறித்த விவாதம் நடந்து நாளை மறுநாள் முடிவு எடுக்கப்பட உள்ள நிலையில் பேரணியாக சென்ற மக்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட திட்டமிட்டனர். அப்போது அங்கிருந்து காவலர்கள் நடத்திய தாக்குதலில் பலர் மோசமாக தாக்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் தாக்கல் கோரிக்கைக்காக நடத்திய பேரணி கலவரத்தில் முடிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்