கனடாவின் சஸ்காட்செவானில் நெடுஞ்சாலை35-ல்ஹம்போல்ட் ப்ரோன்கோஸின் சஸ்காட்செவான் ஜூனியர்ஹாக்கி வீர்கள் பயணம் செய்த பஸ் திஸ்டால் பகுதியில் செல்லும்பொழுதுலாரியில்மோதி விபத்துக்குள்ளானது.
இதை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராயல் கெனடியன் மௌண்டேட் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.மேலும் இந்த விபத்தில்இதுவரை 14 பேர்இறந்துள்ளனர்,14 பேர் படுகாயங்களுடன்மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் நிலையும் மோசமாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை மாலை) போட்டியை முடித்துக்கொண்டு சஸ்காட்செவான் நெடுஞ்சாலையில் 30 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு நோக்கி திஸ்டால் சென்ற பேருந்து சுமார் ஐந்து மணியளவில் லாரி மோதிவிபத்துக்குள்ளானது.
இதற்கான வருத்தத்தை கனடா பிரதமர் ட்ரூட்டோ தனது ட்விட்டரில் ''சிறிதும் எதிர்பார்க்காத விபத்து.இதுவருத்ததைத்தருகிறது'' எனதெரிவித்துள்ளார்.