Advertisment

ஹிஜாப் விவகாரம்: இந்திய தலைவர்களுக்கு மலாலா வேண்டுகோள்!

HIJAB ISSUES Malala appeals to Indian leaders

கர்நாடகா மாநிலத்தில், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதைக் கண்டித்து, ஒரு தரப்பு மாணவர்கள் காவி தூண்டுகளை அணிந்து கல்லூரிக்கு வரத்தொடங்கினர். இதன் காரணமாக மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர சில கல்லூரிகள் தடை விதித்தன.

Advertisment

இதன் தொடர்ச்சியாக கல்லூரிகளில் காவி துண்டை அணிந்து ஒரு தரப்பும், ஹிஜாப்பிற்கு ஆதரவு தெரிவித்து மற்றொரு தரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் இரண்டு தரப்பினரும் மோதிக் கொண்டனர். காவல்துறையினர் சில இடங்களில் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்தச்சூழலில் கல்லூரி ஒன்றில் காவி துண்டு அணிந்தவர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழக்கமிட, மற்றொரு தரப்பு ‘ஜெய் பீம்’ என முழக்கமிடும் காணொளி வெளியானது.

Advertisment

அதன்தொடர்ச்சியாக ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை சூழ்ந்து காவி துண்டு அணிந்தவர்கள், ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட, பதிலுக்கு அந்த மாணவி ‘அல்லாஹு அக்பர்’ என கோஷமிடுவது, சிவமொக்காவில் கல்லூரி ஒன்றில் தேசிய கோடி ஏற்றப்பட வேண்டிய இடத்தில் காவி கொடி ஏற்றப்பட்டது, ஹிஜாப் அணிந்த மாணவிகளை ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றுவது என பல்வேறு வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஹிஜாப் அணிந்து மாணவிகள் பள்ளிக்கு வரக்கூடாது என்று மறுப்பது அதிர்ச்சியளிப்பதாக சர்வதேச பெண்ணுரிமை செயற்பாட்டாளரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மலாலா தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் அணியும் பெண்களுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ள மலாலா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அதிகமாக, குறைவாக உடை அணிவதற்காக பெண்களை போகப்பொருளாகக் கருதும் போக்கு தொடர்கிறது. இஸ்லாமிய பெண்கள் ஒதுக்கப்படுவதை இந்திய தலைவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

karnataka malala Hijab
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe