Advertisment

அரசுக்கு எதிராகத் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பிரபல பெண் இசைக்கலைஞர் திடீர் மரணம்...

அரசுக்கு எதிராகக் கடந்த 288 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த துருக்கி நாட்டின் பிரபல இசைக்கலைஞர் ஹெலின் போலக் உயிரிழந்துள்ளார்.

Advertisment

Helin Bolek passed away

துருக்கியைச் சேர்ந்த 28 வயதே ஆன இளம் இசைக்கலைஞர் ஹெலின் போலக், அந்நாட்டில் மிகவும் பிரபலமான 'க்ரூப் யோரம்' என்ற இசைக்குழுவை நடத்தி வந்தார்.அரசியல் ரீதியான கருத்துகளையும், புரட்சி பாடல்களையும் கொடுத்துமக்கள் மத்திய பிரபலமான இந்தக் குழுவைக் கடந்த 2016 ஆம் ஆண்டு துருக்கி அரசு தடை செய்தது.மேலும், ஹெலின் போலக் உட்பட அந்த குழுவின் உறுப்பினர்கள் சிலரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.அரசின் இந்த அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹெலின் போலக் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.தங்கள் இசைக் குழுவின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கவும்,சிறையிலிருந்து தங்கள் குழுவினரை விடுவிக்கவும் வலியுறுத்தி அவர் இந்தத் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வந்தார்.கடந்த 288 நாட்களாகத் தொடர்ந்த இந்தப் போராட்டத்தால், உடல் நலிவுற்ற ஹெலின் போலக் நேற்று உயிரிழந்துள்ளார்.28 வயதான இந்த இசைக்கலைஞரின் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

turkey
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe