Advertisment

அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சரின் பதில்....

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

Advertisment

heiko maas tweet about iran america issue

Advertisment

டிரம்ப்பின் அறிவுறுத்தலின்பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்தது. இந்த தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இறந்த சுலைமானிக்கு பதிலாக, அவருக்கு அடுத்த நிலையில் இருந்த இஸ்மெயில் கானி தளபதியாக பதவியேற்றுள்ளார். இந்நிலையில், ஈரான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள ஈராக் பாராளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், அமெரிக்க துருப்புக்களை அந்நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காக முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ள டிரம்ப், "ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றினால், பல பில்லியன் டாலர்களை ஈராக் இழப்பீடாக தர வேண்டியிருக்கும். அவ்வாறு தர மறுக்கும் பட்சத்தில், ஈராக்கிற்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும்" என எச்சரித்தார். இதனை விமர்சிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ், "இராக்கை இவ்விவகாரத்தில் மிரட்டுவது அமெரிக்காவுக்கு உதவாது என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

America germany iran iraq
இதையும் படியுங்கள்
Subscribe