Skip to main content

காதலர்களை கவரும் ஸ்பெஷல் சாக்லெட்... கடைக்கு படையெடுக்கும் லவ்வர்ஸ்!

Published on 12/02/2022 | Edited on 12/02/2022

 

jkl

 

வரும் 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கத்திய நாடுகள் வெகுவிமர்சையாக கொண்டாட தயாராகி வருகின்றன. பூங்கொத்துகள், ரோஸ், கேக், டாய்ஸ் என காதலர்கள் தங்களுக்குள் பல்வேறு பொருட்களை பகிர்ந்து கொண்டாலும் சாக்லேட்களுக்கு மட்டும் எப்போதும் தனிஇடம் உண்டு. அந்த வகையில் இந்த காதலர் தினத்துக்கு பெல்ஜியம் நாட்டில் புகழ்பெற்ற சாக்லெட் கடை ஒன்றில் பல்வேறு வடிவங்களில் சாக்லெட் தயாரிக்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் கடையின் உரிமையாளர் பெர்னார்டு என்பவர் தற்போது புதிதாக இதய வடிவிலான சாக்லெட் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். தற்செயலாக அங்கு வந்த சிலர் அதனை புகைப்படம் எடுத்து வைரலாக்கவே தற்போது பெர்செல்ஸ் நகர மக்கள் அனைவரும் அவரது இதய வடிவ ஸ்பெஷல் சாக்லெட்களுக்கு அடிமையாகியுள்ளனர். தற்போது அவரது சாக்லெட்டுக்கு உலகம் முழுவதும் ரசிகர் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆன்லைன் மூலமாகவும் அவர் தற்போது விற்பனையை தொடங்கியுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதல் ஜோடியை முதலைக்கு உணவாக்கிய பெற்றோர்; விசாரணையில் அதிர்ச்சி

Published on 19/06/2023 | Edited on 19/06/2023

 

 Parents who feed a loving couple to a crocodile; Shocked at the trial

 

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனுடன் சென்ற இளம்பெண் மற்றும் அவரது காதலன் இருவரையும் பெண்ணின் பெற்றோரே கொலை செய்து அவர்களது உடலை ஆற்றில் இருக்கும் முதலைகளுக்கு உணவாகப் போட்ட சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

மத்தியப் பிரதேச மாநிலம் மோரினா மாவட்டத்தில் உள்ளது ரதன்பாஸாய் எனும் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஷிவானி தோமர் என்பவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ராதேஷ்யம் தோமர் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இளம்பெண்ணும் அந்த இளைஞரும் ஒருநாள் திடீரென காணாமல் போயினர். ‘தனது மகனையும், அவர் காதலித்து வந்த பெண்ணையும் காணவில்லை. இருவரையும் கண்டுபிடித்து தாருங்கள்’ என இளைஞரின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.

 

இது தொடர்பாக இளம்பெண் ஷிவானி தோமரின் போற்றோர் மற்றும் உறவினர்களை போலீசார் விசாரித்து வந்தனர். போலீசார் ஷிவானியின் தந்தை உள்ளிட்டவர்களை விசாரித்த பொழுது அந்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது. கடந்த ஜூன் மூன்றாம் தேதி ஷிவானியின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் ஒன்று சேர்ந்து ஷிவானி மற்றும் ராதேஷ்யம் தோமர் ஆகிய இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளனர். பின்னர் இருவரது உடலையும் கல்லைக் கட்டி சம்பல் நதியில் ஆயிரக்கணக்கான முதலைகள் உள்ள இடத்தில் உணவாக வீசியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Next Story

'அப்பா குடிப்பழக்கத்தை விட்டுடுங்க; என் ஆத்மா சாந்தியடையும்'- கடிதம் எழுதிவிட்டு மாணவி தற்கொலை

Published on 04/06/2023 | Edited on 04/06/2023

 

 Student  after writing letter 'Father, give up drinking, my soul will be at peace'

 

'அப்பா குடிப்பழக்கத்தை விட்டுடுங்க. என் ஆத்மா சாந்தியடையும்' என கடிதம் எழுதிவிட்டு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்னராஜாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு.  கூலி  தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவரது 16 வயது மகள் விஷ்ணுபிரியா, குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 410 மதிப்பெண் பெற்றுள்ளார். 

 

விஷ்ணுபிரியாவின் தந்தை  குடித்துவிட்டு வந்து தினமும் வீட்டில் சண்டை போடுவதை பார்த்து மனவருத்தத்தில் இருந்துள்ளார். மன வேதனை அடைந்த விஷ்ணுபிரியா ஜூன் 3ஆம் தேதி மாலை கடிதம் எழுதி வைத்துவிட்டு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

 

அந்த கடிதத்தில் 'எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை, எனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும் , எனது குடும்பம் எப்பொழுது  மகிழ்ச்சியாக இருக்கின்றதோ அப்போதுதான் எனது ஆத்மா சாந்தி அடையும்' என கடிதம் எழுதி வைத்துள்ளார். 

 

இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.