ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து 176 பேருடன் புறப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 176 பேரும் பலியாகினர்.

Advertisment

ds

புதன்கிழமை காலை டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 176 பேரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. தொழில் நுட்ப காரணங்களால் விமானம் விபத்தில் சிக்கியதா? அல்லது தாக்கப்பட்டதா? என விசாரணை நடந்து வந்தது. விமானத்தை ஈரான் படையினரே தவறுதலாக சுட்டு வீழ்த்தியிருக்கின்றனர் என அமெரிக்கா மற்றும் கனடா குற்றம்சாட்டியது. இந்நிலையில், மனித தவறின் காரணமாக ஈரான் ராணுவம் தான் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

Advertisment

இதுகுறித்து பேசியுள்ள அந்நாட்டு அதிபர் ஹாசன் ரூஹானி, "மனிதப் பிழையின் காரணமாக ஏற்பட்ட ஏவுகணை தாக்குதல் காரணமாகவே உக்ரேனிய விமானத்தின் பயங்கரமான விபத்து மற்றும் 176 பேரின் மரணம் நிகழ்ந்தது என ஆயுதப்படைகளின் உள் விசாரணையில் முடிவு தெரியவந்துள்ளது. இந்த மன்னிக்க முடியாத தவறு தொடர்பாக சட்ட விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்படும்" என தெரிவித்துள்ளார்.