ஹார்வர்டு பல்கலைகழகத்தின் பொது மேலாண்மை இதழான, ஹார்வர்டு பிஸினஸ் ரிவ்யூ வெளியிட்டுள்ள 2019ஆம் ஆண்டின் சிறந்த 100 தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில் 3 இந்திய வம்சாவளியினர் இடம்பிடித்துள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்களில் ஆய்வு செய்து, அவற்றின் வளர்ச்சி மற்றும் நிர்வாகங்களில் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த 100 சி.இ.ஓ க்கள் பட்டியலை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அடோப் நிறுவனத்தை சேர்ந்த சாந்தனு நாராயண் 6ஆவது இடமும், மாஸ்டர்கார்டு நிறுவனத்தை சேர்ந்த அஜய் பங்கா 7ஆவது இடமும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சேர்ந்த சத்ய நாதெல்லா, 9ஆவது இடமும் பிடித்துள்ளனர். உலகின் சிறந்த தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில் முதல் 10 இடத்தில் 3 இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றிருப்பதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.