Advertisment

விபரீதத்தில் முடிந்த டிக் டாக் வீடியோ... இளம் பெண்ணுக்கு நேர்ந்த சிக்கல்!

டிக் டாக் வீடியோ எடுப்பதற்காக இளம்பெண் செய்த முயற்சி ஆபத்தில் முடிந்த சம்பவம் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள ஓன்டேரியோ மாகாணத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவி மோலி ஓ பிரைன். இவர் நூற்றுக்கணக்கான டிக் டாக் வீடியோக்களை இணையதளங்களில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அந்த பகுதியில் இவர் பிரபலமாக இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் அந்த பெண்ணின் தம்பிக்கு சில தினங்களுக்கு முன்பு பிறந்த நாள் வந்துள்ளது.

Advertisment

fg

இதனால் தம்பிக்கு நூதன முறையில் வாழ்த்து தெரிவிக்க விரும்பிய அந்த பெண், மவுத்தார்கன்னை கைகளில் பிடிக்காமல் வாயில் வைத்தவாறே அவரிடம் வாழத்து தெரிவிக்க சென்றுள்ளார். அதனை டிக் டாக் வீடியோ எடுக்கவும் முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அது அவருடைய வாயின் உட்புறத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரின் பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். நீண்ட முயற்சிக்கு பிறகு வாயில் இருந்த மவுத்தார்கன்னை மருத்துவர்கள் அகற்றினார்கள். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

girl
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe