ஒசாமாவின் மகன் உயிரிழந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தகவல்...

அல்கொய்தா அமைப்பின் தலைவனும், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான நபருமான ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

hamza passed away

பின் லேடன் மரணத்திற்கு பிறகு அவரது மகன் ஹம்சா தான் அல் கொய்தா அமைப்பை நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்து வந்தது. மேலும் ஹம்ஸாவை சர்வதேச பயங்கரவாதியாகவும் அறிவித்த அமெரிக்கா, ஹம்சா குறித்து தகவல் தருபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என அறிவித்தது. இந்நிலையில் தற்போது ஹம்சா கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

America
இதையும் படியுங்கள்
Subscribe