Skip to main content

கரையைக் கடந்த ஹமூன் புயல்

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

Hamoon storm over the coast

 

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ஈரான் பரிந்துரை செய்த ஹமூன் என்ற பெயர் சூட்டப்பட்டது. ஹமூன் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் நேற்று (24ம் தேதி) அதிகாலை தீவிர புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

 

இந்தப் புயலின் காரணமாகத் தமிழ்நாட்டில், சென்னை, கடலூர், நாகை, பாம்பன், புதுச்சேரி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்நிலையில் வங்ககடலில் உருவான ஹமூன் புயல் தீவிர புயலாக வலுப்பெற்று, மீண்டும் புயலாக வலுவிழந்து வங்கதேச கடற்கரையில் கரையைக் கடந்தது. வங்கதேச கடற்கரை பகுதியில் சிட்டகாங்கிற்கு தெற்கில் அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணியளவில் தீவிர புயலான ஹமூன், புயலாக வலுவிழந்து கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 85 கி.மீ. முதல் 95 கி.மீ, வேகத்தில் சூறைக்காற்று வீசியது.

 

மேலும் வங்க தேசத்தில் கேபுபராவிற்கு 180 கி.மீ. கிழக்கிலும், சிட்டகாங்கிற்கு 40 கி.மீ. தெற்கிலும் ஹமூன் புயல் மையம் கொண்டுள்ளது. வட கிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசத்தின் சிட்டகாங் - கேபுபரா இடையே நாளை மாலை புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 65 முதல் 75 கி.மீ. இடையிடையே 85 கி.மீ. வேகத்தில் வீசக்க்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்