Halloween rally stampede

Advertisment

தென்கொரியாவில் ஹாலோவீன் பேரணியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியா நாட்டின் சியோலில் உள்ள ஹிட்தாஹூன் பகுதியில் ஹாலோவீன் கொண்டாட்டம் நடைபெற்றது. அதன் தொடர்பாக பேரணியும் நடைபெற்றது. அப்பொழுது பொதுமக்கள் ஹாலோவீன் போல வேடங்கள் அணிந்து கொண்டு நடமாடினர். இதில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரதான வீதியை ஒட்டிய குறுகிய வீதி மற்றும் சந்துகளில் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றபொழுது திடீரென அந்த பகுதியில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 19 வெளிநாட்டினர் உட்பட 151 பேர் இறந்ததாக முதற்கட்டமாகதகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.