Hair all over the body ... snake that goes viral!

உடல் முழுவதும் ரோமங்களைக் கொண்ட பாம்பின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தாய்லாந்தின் சக்கூன் நகரை சேர்ந்த டூ என்ற நபர் அவரின் வீட்டிற்கு அருகே உள்ள சதுப்புநில காட்டில் ரோமங்களுடன் கூடிய பச்சை நிற நெளியும் உயிரினம் ஒன்றை பார்த்து அதிர்ந்துள்ளார். முழுவதும் பச்சை நிறத்தில் இருந்ததால் அது பாசியாக இருக்கலாம் என நினைத்த அந்த நபருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அந்த வினோத உயிரினத்தின் வாயிலிருந்து பாம்பினைபோன்றுநாக்கு வெளியே வந்தது. உடனே அதனை பிடித்த டூ அதனை தனது வீட்டிற்கு கொண்டுவந்து தண்ணீர் தொட்டியில் விட்டுள்ளார். பச்சை ரோமத்துடன் பாம்பு தண்ணீரில் ஊர்ந்து செல்வதை வீடியோவாக பதிவு செய்த டூ அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ வைரலாகியது.

Advertisment

இந்த அதிசய பாம்பு தொடர்பாக உயிரியல் ஆராய்ச்சியாளர்களிடம் அவர் தெரிவித்த நிலையில், அந்த புதுவகை ரோமம் கொண்ட பாம்பு குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.