Advertisment

ரஷ்யப் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர்... எட்டு பேர் பலி!

PERM STATE UNIVERSITY

Advertisment

ரஷ்யாவில் அமைந்துள்ளபெர்ம் மாநில பல்கலைக்கழகத்தில், அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 18 வயது மாணவன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான். இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டிலிருந்துதப்பிக்க ஜன்னல் வழியாகக் குதிக்கமுயன்றபோதுசிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறான். கைது செய்யும்போது அந்த மாணவனுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் முன்னரேதனது தாக்குதல் நடத்தும் நோக்கத்தைச் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டதாக சில உறுதி செய்யப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisment

மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டிற்குப் பயந்து ஜன்னல் வழியாகக் குதிக்கும் வீடியோவை ரஷ்யஊடகம் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே ரஷ்யாவில் உள்ள இந்தியத்தூதரகம், இந்த சம்பவத்தில் இந்திய மாணவர்களுக்குப் பாதிப்பில்லை எனத்தெரிவித்துள்ளது. இதுதொடர்பாகஇந்தியத்தூதரகம், "ரஷ்யாவில் பெர்ம் மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த பயங்கர தாக்குதலினால் அதிர்ச்சியடைந்தோம். உயிரிழப்பிற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகள்.உள்ளூர் அதிகாரிகள், இந்திய மாணவர்களின் பிரதிநிதிகளுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. அனைத்து இந்திய மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளனர்" எனத்தெரிவித்துள்ளது.

University gun Russia
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe