Advertisment

புதிய பதிப்பில் GTA வீடியோ கேம்; உற்சாகத்தில் ரசிகர்கள்!

GTA video game in new version trailer

Advertisment

கடந்த 1997 ஆம் ஆண்டுகிராண்ட் தெஃப்ட் ஆட்டோ (GTA) என்ற வீடியோ கேம்மை இங்கிலாந்தைச் சேர்ந்தராக்ஸ்டார் என்ற நிறுவனம்அறிமுகப்படுத்தியது. கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ (Grand Theft Auto) என்பது வாகனங்களைத்திருடிச் செல்லும் கும்பலில் ஒருவராகப் பங்குபெற்று விளையாடும் ஒரு வீடியோ கேம் ஆகும். இந்த வீடியோ கேம்மின் பதிப்பு ஒவ்வொரு முறையும் அப்டேட் செய்யப்பட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது.

இதுவரை கிராண்டு தெஃப்ட் ஆட்டோ V வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்த பதிப்பு உலகத்தின் இரண்டாவது விற்பனையான கேம் என்ற பெருமையையும், 185 பில்லியனுக்கு அதிகமான பிரதிகள் விற்பனை செய்யப்பட்ட கேம் என்ற பெருமையையும் தக்க வைத்துள்ளது.

இந்த நிலையில், கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ வீடியோ கேம்மின் அடுத்த பதிப்பை வெளியிடவுள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ VI கேம்மின் பதிப்பை விட எந்த கேமும் ரசிகர்கள் மத்தியிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும், மடிக்கணினி, லேப்டாப் ஆகிய எலக்ட்ரானிக் பொருட்களில் விளையாடும் இந்த விளையாட்டு ஆன்ட்ராய்டு மொபைலிலும் விளையாடும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ராக்ஸ்டார் நிறுவனம் தொடங்கப்பட்டு அடுத்த மாதத்தோடு 25வது வருடத்தை எட்டவுள்ளது. ராக்ஸ்டாரின் 25வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக இந்த வீடியோ கேம்மின் அடுத்த பதிப்பான கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ VI கேம்மின் ட்ரையிலரை வெளியிடத்திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தசாப்தங்களில் மிக முக்கியமான பொழுதுபோக்கு வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ கேம்மின் அடுத்த பதிப்பு வெளியாகும் என்று அந்நிறுவனம் அறிவித்ததையடுத்து கிராண்ட தெஃப்ட் ஆட்டோ கேம்மின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

gta
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe