லண்டனில் பாபி குக் - சியாரா ஓ டன்னேல் என்ற தம்பதியின் திருமணம் பலரைத் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இவர்கள் தேர்வு செய்த திருமண முறைதான். அவர்கள் ரிவர்சல் தீம் எனப்படும் மணப்பெண் செய்ய வேண்டியதை எல்லாம் மணமகன் செய்தும், மணமகன் செய்ய வேண்டியதை எல்லாம் மணப்பெண் செய்வதுமான தீமை தேர்வு செய்தனர்.

Advertisment

அதன் படி பாபி குக் மணப்பெண் உடையை அணிந்துகொண்டார். சியாரா மணமகன் சூட்டை அணிந்து கொண்டார். லண்டனிலுள்ள திருமண முறையில் விருந்தினர்கள் அமர்ந்திருக்க அவர்களின் நடுவே மணமகள் மணமகனை அழைத்து வரும் சம்பர்தாயம் இருந்தது. இந்த சம்பர்தாயமும் இந்த தீமில் மாற்றப்பட்டு மணமகன் மணப்பெண்ணை அழைத்து வந்தார். இந்த திருமணம் பலரது கவனத்தை ஈர்த்தது. இந்த திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.