
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அப்போராட்டத்திற்கு ஆதரவாக, பல்வேறு வெளிநாட்டுப் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர். அந்தவகையில் விவசாயப் போராட்டத்திற்குஆதரவு தெரிவித்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சூழலியல் போராளிக்ரேட்டா தன்பெர்க், விவசாயிகள் போராட்டத்தைஎப்படி நடத்தலாம் என்ற வழிமுறைகள் அடங்கியஆவணம் (toolkit) ஒன்றைதனதுட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். ஜனவரி26 ஆம் தேதி, விவசாயிகள் போராட்டத்தில் கலவரம் வெடித்த நிலையில், க்ரேட்டா தன்பெர்க்பகிர்ந்தடூல்கிட்மீது, டெல்லி வன்முறைக்குக் காரணமாக இருந்ததாக வழக்குப் பதிவுசெய்தனர்.
அதனைத் தொடர்ந்து, 22வயதானஇந்தியச் சூழலியல் ஆர்வலர் திஷாரவி, க்ரெட்டா தன்பெர்க் பகிர்ந்தஆவணத்தை உருவாக்கியவர்களுள் ஒருவர் எனவும்அவரே அந்த ஆவணத்தை க்ரெட்டாவுடன் பகிர்ந்துகொண்டார் எனவும்அவருக்குக் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுடன் தொடர்பு உள்ளதாகவும் கூறி டெல்லிபோலீஸார் அவரைக் கைதுசெய்து போலீஸ் காவலில் சிறையில் அடைத்தனர். திஷாரவி, க்ரெட்டாவின் ‘ஃப்ரைடேஃபார் ஃபியூச்சர்’ அமைப்பின், இந்தியக் கிளையைஉருவாக்கிசெயல்படுபவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. திஷாரவியின்கைதிற்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திஷா ரவியின் போலீஸ் காவல் முடிவடைவதையொட்டி, டெல்லி போலீசார் நேற்று (19.02.2021) அவரைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து நீதிமன்றம் திஷாரவியை, மூன்று நாட்கள்நீதிமன்றகாவலில்வைக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில்திஷாரவியின்கைதுகுறித்துமுதல்முறையாக க்ரெட்டா தன்பெர்க் கருத்துதெரிவித்துள்ளார். ‘ஃப்ரைடேஃபார் ஃபியூச்சர் இந்தியா’ அமைப்பு, திஷாரவிக்குதுணை நிற்பதாக சிலட்விட்களை செய்துள்ளது. அதை ரீ-ட்விட்செய்துள்ளக்ரெட்டா, “பேச்சு சுதந்திரம் மற்றும் அமைதியாக கூடுவதற்கும், போராடுவதற்குமான உரிமை ஆகியவை சமரசத்திற்கு அப்பாற்பட்ட மனித உரிமைகள். இவை எந்தவொரு ஜனநாயகத்தின் அடிப்படை பகுதியாக இருக்க வேண்டும். #StandWithDishaRavi" எனப் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)