இந்தியாவில் ஒரு பேச்சு.. இலங்கையில் ஒரு பேச்சு... விமர்சனத்துக்குள்ளாகும் கோத்தபய ராஜபக்சே...

சீனாவிடம், இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு விட்டது குறித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

gotabaya

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவிற்கு இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்ற கோத்தபய ராஜபக்சே, மூன்று நாட்கள் பயணமாக இந்தியா வந்தார். அப்போது இந்தியா, இலங்கை உறவை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்த சுற்றுப்பயணத்தின் போது பேசிய கோத்தபய, இலங்கையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்கியது தவறு எனவும், இது தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் இலங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய கோத்தபய ராஜபக்சே, 99 வருடங்களுக்கு சீனாவிற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் வணிக உடன்படிக்கையில் தனக்கு பிரச்சனை இல்லை என்றும், அந்த வணிக உடன்படிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்த தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு பாதுகாப்பு ரீதியில் சிக்கலை ஏற்படுத்தும் இந்த துறைமுக விவகாரத்தில் இந்தியாவில் ஒன்று பேசிவிட்டு, இலங்கை சென்று ஒன்று பேசுகிறார் என கோத்தபய ராஜபக்சே மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

china GOTABAYA RAJAPAKSE srilanka
இதையும் படியுங்கள்
Subscribe