Advertisment

ஹெலிகாப்டரில் பறந்த கொரில்லா... காரணம் இதுதான்!

jhk

கொரில்லா ஒன்றைஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, சிகிச்சை அளித்தசம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் விலங்கியல் பூங்கா அந்த நாட்டில் உள்ள பூங்காக்களிலேயே பெரிய அளவில் உள்ள பூங்கா ஆகும். பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் உடைய அந்த பூங்காவில் கொரில்லா ஒன்றுக்கு கடந்த சில நாட்களாக சளி மற்றும் தும்பல் இருந்தது. அங்குள்ள விலங்கியல் மருந்துவர்கள் அதற்கு சிகிச்சை வழங்கியும் அது சரியாகவில்லை.

Advertisment

இதனால் குழப்பமான மருத்துவர்கள் அதனை 64 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்ற மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். அங்குதான் 200 கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட விலங்கினங்களை சிடி ஸ்கேன் செய்யும் இயந்திரம் உள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டு, கொரில்லா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரில்லாவின் மூக்கில் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 9ம் தேதி கொரில்லாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர்.

Advertisment
Gorilla
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe