கொரில்லா குரங்குகள் எப்போதாவது இரண்டு கால்களில் நடப்பதை சிலர் பார்த்திருக்கலாம். ஆனால், அமெரிக்காவில் உள்ள பிலாபெல்டியா வனவிலங்கு அருங்காட்சியகத்தில் இருக்கும் லூயிஸ் எனும் கொரில்லாவை எப்போதும் இரண்டு கால்களில் மனிதனைப் போலவே நடப்பதைப் பார்க்கமுடியும் என்கின்றனர் அருங்காட்சியக பாதுகாப்பாளர்கள்.

Advertisment

18 வயது நிரம்பிய இந்த லூயிஸ் கொரில்லா மேற்கத்திய லோலேண்ட் வகையைச் சேர்ந்தது. ஆறு அடி உயரமும், 200 கிலோ எடையும் கொண்ட லூயிஸ் தன் கை நிறைய உணவுகளை வைத்திருந்தாலோ, நடக்கும் தரை சகதியாக இருந்தாலோ தன் இரண்டு காலில் நடக்குமாம். லூயிஸைக் காண அருங்காட்சியகத்திற்கு கூட்டம் அலைமோதுவதாகக் கூறும் ஊழியர்கள், அது இரண்டு கால்களில் நடக்கும் காட்சியையும் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி விட்டிருக்கின்றனர்.

Advertisment

இது முற்றிலும் பொய்.. யாரோ மாறுவேடத்தில் நடக்கிறார்கள் என்றும், நான் கூட கையில் சாப்பாடு வைத்திருந்தால் இப்படித்தான் நடப்பேன் என்றும் இந்த வீடியோவைப் பார்த்த சிலர் ஜாலியாக பதிவிட்டிருந்தனர். அதேசமயம், வேறுசிலரோ கொரிலாக்கள் நடப்பது நமக்கு ஆபத்து.. வெகுவிரைவில் நம்மை அழிக்க படையெடுக்கும் என்றும் பதிவிட்டுள்ளனர்.

Advertisment