/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/google.jpg)
இணைய உலகத்தில் இன்றியமையாத தேடு பொருளாக இருக்கும் கூகுள் வணிகத்தையும் தாண்டி பல நலத்திட்டங்களையும் செய்துள்ளது. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்காகஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. கூகுள் மேப்ஸ்ஸில் "சக்கர நாற்காலி வழி" எனஒரு புது ஆப்ஷனை சேர்த்துள்ளது, கூகுள். முதலில் லண்டன், நியூயார்க், டோக்கியோ, மெக்ஸிகோ, பாஸ்டன், சிட்னி போன்றஉலகின் பெரிய மெட்ரோ நகரங்களில் இதை கொண்டுவந்துள்ளது கூகுள்.
இதை பயன்படுத்துவதற்கான வழிகள்:
கூகுள் மேப்பில் செல்லும் இடத்தை (directions)தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதில் பொதுவழித்தடத்தை (public transport) தேர்ந்தெடுக்க வேண்டும்.
விருப்பங்களை (options) க்ளிக் செய்து சக்கர நாற்காலி (wheelchairs)வசதியை க்ளிக் செய்யவேண்டும்.
Follow Us