scott morrison

ஆஸ்திரேலிய அரசு கொண்டுவரவுள்ள புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கூகுள், அந்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் தனது தேடல் சேவையை(கூகுள் சர்ச்) ஆஸ்திரேலியாவில் நிறுத்தப்போவதாக எச்சரித்துள்ளது.

Advertisment

ஆஸ்திரேலியா அரசின்புதிய சட்டப்படி,கூகுள், ஃபேஸ்புக்உள்ளிட்ட தளங்களில் பயனர்கள் படிக்கும்உள்நாட்டு செய்திகளுக்காக, அந்த தளங்கள் உள்நாட்டுசெய்தி நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். கூகுள்போன்ற தளங்கள், செய்திகளைப் படிக்க விரும்பும் மக்களிலிருந்து வாடிக்கையாளர்களை உருவாக்கிக் கொள்கிறது. எனவே இந்த தளங்கள், செய்தி நிறுவனங்களின் ஊடகவியலுக்கு நியாமானதொகையை தர வேண்டும் எனஆஸ்திரேலிய அரசு இப்புதிய சட்டத்திற்கான காரணங்களைக் கூறுகிறது.

இதற்குஎதிர்ப்பு தெரிவித்துள்ள கூகுள்ஆஸ்திரேலியாவின் நிர்வாக இயக்குனர், “இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், கூகுள் சர்ச் வசதியை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை” எனக் கூறியுள்ளார். அதே நேரத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், "இந்த நாட்டில் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களுக்கானவிதிமுறைகளை ஆஸ்திரேலியாஉருவாக்குகிறது. அதன்படி பணியாற்ற விரும்புபவர்கள் வரலாம். ஆனால் நாங்கள் மிரட்டல்களைக் கண்டுகொள்ள மாட்டோம்" என கூறியுள்ளார்.

Advertisment