Advertisment

99 செல்போன்களை வைத்து கூகுள் மேப்பை திணறடித்த முதியவர்!

வயதான ஒருவர் செல்போன்களை பயன்படுத்தி கூகுளை திணறடித்த சம்பவம் ஜெர்மனியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் ஜான் பெக்ளே. இவர் அந்நாட்டில் உள்ள மிகப்பெரிய ஓவியர். இவரின் படங்கள் அந்நாட்டில் பலகோடி ரூபாய்க்கு விற்பனை ஆகும். அந்நகரத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் இவரை தெரியும். தற்போது இவர் செய்த செயல் ஒன்றினால் கூகுள் மேப் அரண்டு போன சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது.

Advertisment

இவர் பரபரப்பான கோலே சாலையில் ஒரு டிரேயில் 99 ஸ்மார்ட் போன்களை வைத்து சாலையில் இழுத்து சென்றுள்ளார். 99 வாகனங்கள் சாலையில் ஒரே நேரத்தில் செல்வதாக நினைத்த கூகுள் மேப்பும் வாகன நெரிசலுக்கு காட்டும் சிவப்பு வரிகளை காட்டியுள்ளது. இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த சிக்னலை தங்களின் செல்போன்களில் பார்த்து அந்த வழியாக செல்வதை தவிர்த்து மாற்று பாதையில் சென்றனர். ஆனால் குறிப்பிட்ட சாலையில் வாகன நெரிசல் ஏதும் இல்லாமல் சாதாரணமாகவே இருந்தது. என்ன காரணத்துக்காக இவர் இதை செய்தார் என்று அவர் எதையும் குறிப்பிடவில்லை. கூகுள் மேப் சரியானது அல்ல என்பதை காட்ட இவர் இவ்வாறு செய்திருப்பாரோ என்று சிலர் கருத்தாக கூறுகிறார்கள்.

google
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe