புதிதான ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்பவர்கள், வேலைக்காக கிராமங்களில் இருந்து புதிய நகரங்களுக்கு குடிபெயர்பவர்கள் என பலருக்கும் பேருதவியாக இருக்கும் ஒரு செயலி என்றால், அது கூகுள் மேப் எனலாம். மளிகைக்கடை முதல் மருத்துவமனை வரை பல இடங்களுக்கும் வழிகாட்டும் இந்த மேப் வசதி செயல்பாட்டுக்கு வந்து இன்றோடு 15 ஆண்டுகள் ஆகின்றன.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இதனை கொண்டாடும் வகையில் அல்ஃபபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், "இன்றளவும் எனது வாழ்க்கையில் பல வழிகளில் உதவியாக உள்ளது இந்த கூகுள் மேப்ஸ். நான் எங்கிருந்தாலும் அப்பகுதியில் எனது உணவுக்கான வழியை முதற்கொண்டு இது காட்டுகிறது. இந்த வசதியை பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.