இத்தாலி நாட்டை சேர்ந்தமாஃபியா குழு ஒன்றின்உறுப்பினரான ஜியோஅச்சினோ காமினோ என்ற நபர் 20 வருடங்களாக அந்தநாட்டுபோலீஸாரால்தேடப்பட்டு வந்த நிலையில், அவர் தற்போது கூகுள் மேப்பினால்சிக்கிக் கொண்டுள்ளார். கூகுள் மேப்பின் ஸ்ட்ரீட் வியூ புகைப்படத்தில் ஒரு பழக்கடையின்வாசலில்ஜியோஅச்சினோ காமினோவை போல ஒரு நபர் நிற்பது போல இருந்துள்ளது.
அந்த புகைப்படத்தை தொடர்ந்து 2 வருடமாக தீவிர விசாரணை நடத்திய இத்தாலி போலீஸார்,ஜியோஅச்சினோ காமினோஸ்பெயினில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஸ்பெயின் போலீஸாரால்கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அடுத்த மாத இறுதிக்குள் இத்தாலி கொண்டுவரப்படுவார் என இத்தாலி போலீஸார் தெரிவித்துள்ளார்.