Skip to main content

ஆபத்தான 25 செயலிகள்... உடனே டெலீட் செய்ய கூகுள் நிறுவனம் அறிவுரை...

Published on 06/07/2020 | Edited on 06/07/2020

 

google bans 25 apps

 

பயனாளர்களின் தகவல்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடிய 25 செயலிகளை உடனடியாக மொபைலில் இருந்து நீக்கிட கூகுள் நிறுவனம் பயனாளர்களை அறிவுறுத்தியுள்ளது. 

 

கடந்த மாதத்தில், பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திரட்டும் 50 செயலிகளுக்கு கூகுள் நிறுவனம் தடை விதித்தது. இந்நிலையில் அதேபோன்ற 25 ஆபத்தான செயலிகளின் பட்டியலை கூகுள் மற்றும்  சைபர் செக்யூரிட்டி நிறுவனமான எவினா ஆகிய நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. 

 

அதன்படி Super Wallpapers Flashlight, Padenatef, Wallpaper Level, Contour Level wallpaper, iPlayer & iWallpaper, Video Maker, Color Wallpapers, Pedometer,Powerful Flashlight, Super Bright Flashlight, Super Flashlight, Solitare Game,  Accurate scanning of QR code, Classic card game, Junk file cleaning, Synthetic Z, File Manager, Composite Z, Screenshot Capture, Daily Horoscope Wallpapers, Wuxia Reader, Plus Weather,Anime Live Wallpaper, Health Step Counter ஆகிய செயலிகள் பயனாளர்களின் மொபைலில் இருந்தால் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊழியர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு தந்த கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Google CEO Sundar Pichai gave a shocking announcement to the employees!

உலகின் முன்னனி பன்னாட்டு இணையதள மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் தான் கூகுள் நிறுவனம். கலிபோர்னியாவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பொறுப்பு வகித்து வருகிறார். 

இதற்கிடையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஊழியர்களில் 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்தது. அப்போது, இது பேசுபொருளாக அமைந்தது. இந்த பணிநீக்க நடவடிக்கையை தொடர்ந்து, 2024ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து,  கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘நிறுவனத்தின் செயல்பாட்டை எளிதாக்குவதற்கான சில அடுக்குகளை நீக்க வேண்டியது காலத்தின் அவசியம். அதனால், இந்த ஆண்டும் பணி நீக்கங்கள் தொடரும். இந்த பணி நீக்க நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளின் அடுக்குகளை நீக்குவதாக இருக்கும். ஆனால், இந்த பணி நீக்கம் கடந்தாண்டின் அளவிற்கு இருக்காது. அதே போல், இது அனைத்து துறையிலும் இருக்காது” என்று தெரிவித்தார். 

கூகுள் நிறுவனங்களில் கடந்தாண்டு சுமார் 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் பணிநீக்க நடவடிக்கை தொடரும் என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியிருப்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Applications are welcome for Computer Tamil Award

 

2023 ஆம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தனிநபர் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் மற்றும் செயலிகள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் கடந்த 2020, 2021, மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்திலோ, http://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாகவோ இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 

இதுதவிர, தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவோ 31.12.2023 ஆம் நாளுக்குள் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். தக்க ஆவணங்களோடு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட இணையதளத்திலேயே போதுமான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

 

கூடுதல் விவரங்களுக்கு 044 28190412, 044 28190413 என்ற தொலைப்பேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் (31.12.2023) பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.