google

Advertisment

செல்ஃபோனில் யூ-ட்யூப் தளம் செயல்படாததால், யூ-ட்யூப் பயனர்களுக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் அனைத்துச் செயலிகளும் செல்ஃபோனில் செயல்படாததால் பயனர்களுக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. யூ-டியூப், ஜி-மெயில், கூகுள் டாக்ஸ், பிளே ஸ்டோர் போன்ற அதிகம் பயன்படுத்தப்படும் கூகுளின் முக்கியச் செயலிகளின்சர்வரில் ஏற்பட்டகோளாறு காரணமாக, செல்ஃபோன்களில் செயல்படவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைச் சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக, கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் அரை மணிநேரத்தில் இந்தக் கோளாறு சரி செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.