ADVERTISEMENT

கரோனாவுக்கு எதிராகக் கைகோர்த்த போட்டியாளர்கள்... ஆப்பிள், கூகுளின் புதிய முயற்சி...

11:35 AM Apr 13, 2020 | kirubahar@nakk…


தொழில்நுட்ப உலகின் மிகப்பெரிய போட்டியாளர்களான ஆப்பிள் நிறுவனமும், கூகுள் நிறுவனமும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒன்றிணைந்து புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால், 1.14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், 4.2 லட்சம் பேர் குணமடைந்து மீண்டுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 9000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 850-க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனமும், கூகுள் நிறுவனமும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒன்றிணைந்து புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இதுகுறித்து இரு நிறுவனங்களும் வெளியிட்ட அறிவிப்பின்படி, கரோனா பரவலைக் கண்காணிக்கு புதிய தொழில்நுட்பம் ஒன்றை இரு நிறுவனங்களும் இணைந்து கட்டமைக்க உள்ளன. மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த வசதியின் மூலம் கரோனா பாதித்தவர்கள் அருகில் நாம் இருக்கிறோமா என்பதனை கண்டறிய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுச் சுகாதாரத்துறை அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட கரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் தகவல்களைக் கொண்டு இந்த வசதி செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் அறிமுகமாக உள்ளதாகக் கூறப்படும் இதில், ப்ளூடூத் மூலம் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு தொலைப்பேசிகளில் தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்று கரோனா பாதிக்கப்பட்ட நபரைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT