பிரபல பாடகி வீட்டில் மர்மமான முறையில் இறந்து மீட்கப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

goo hara

கடந்த 2008ஆம் ஆண்டு தென்கொரிய டிவி நடிகையாக வலம் வந்து பின்னர் கே-பாப் எனப்படும் கொரிய பாப் பாடகியாக வலம் வந்தவர் ஹாரா. இவரது முதல் பாடல் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி, செம ஹிட் அடித்தது.

அண்மையில்தான் ஹாரா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் தப்பினார். இந்நிலையில், ஹாரா நேற்று தனது இல்லத்தில் மர்மமான முறையில் இறந்த நிலையில் போலீஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

Advertisment

முன்னதாக சமூகவலைதளங்களில் தன்னைப் பற்றிய விமர்சனங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த ஹாரா, இனி தன்னை விமர்சித்தால் போலீஸில் புகாரளிப்பேன் என்றும் விமர்சிப்பவர்களை எச்சரித்தார். ஹாராவை போல கே-பாப் பாடகியான சுல்லி என்பவரும் அண்மையில் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.