dtyjd

Advertisment

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட 24 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென்கொரியாவைச் சேர்ந்த 2 பெண்கள் ஹாங்காங்கில் இருந்து விமானத்தில் சென்னை வந்துள்ளனர். சோதனையின் பொது சந்தேகம் ஏற்படும் வகையில் நடந்துகொண்டதால், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்பொழுது அவர்கள் கடத்தி வந்த24 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட அந்த தங்கத்தை கொண்டு, அதனை கடத்தி வந்த பெண்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்திவரப்பட்ட இந்த தங்கத்தின் மதிப்பு 8 கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.