ADVERTISEMENT

மலை முழுவதும் கொட்டிக்கிடக்கும் தங்கம்... அள்ளுவதற்காக அலைபாய்ந்த மக்கள்... தடை விதித்த அரசு!

03:59 PM Mar 09, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ குடியரசு. இந்த நாட்டின் தெற்கு கிவ் மாகாணத்தில், ஒரு மலையில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பிட்ட மலையில் இருக்கும் மண்ணில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அந்த மலைக்குப் படையெடுத்தனர்.

அந்த மலைக்கு வந்த காங்கோ மக்கள், அந்த மலையைத் தோண்டி தங்கம் எடுக்கும் முயற்சியில் இறங்கினர். மண்ணைத் தோண்டுவதற்கு மண்வெட்டிகள் உள்ளிட்டவற்றை மட்டுமின்றி வெறும் கைகளையும் பயன்படுத்திய அவர்கள், தங்கம் கலந்த மண்ணை வீட்டிற்கு எடுத்துச் சென்று அதிலிருந்து தங்கத்தை எடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தங்கத்தை வெட்டியெடுப்பதற்கு காங்கோ அரசு தடை விதித்தது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT