
கூகுளின் இமெயில் சேவை உலக அளவில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் முடங்கியதால் பயனர்கள் அவதி அடைந்தனர்.
கூகுளின் ஜிமெயில் ஆப் மற்றும் டெஸ்க்டாப் ஆகிய இரண்டுமே சுமார் 2 மணி நேரம் இயங்காமல் முடங்கியது. இதனால் மெயில்கள் டெலிவரி ஆகாமல் பல முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் கூகுளின் ஜிமெயில் சேவை துவங்கியது. உலக அளவில் அதிக பயனாளிகளை கொண்ட கூகுள் ஜிமெயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டதால் பயனர்கள் அவதிக்குள்ளாக்கினார்.