Skip to main content

இரண்டு மாதமாக தூங்கும் பெண்... காரணம் தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க!

Published on 30/10/2019 | Edited on 30/10/2019


கொலம்பியாவைச் சேர்ந்த 17 வயது இளம் பெண் ஷாரிக் தோஹார். இவருக்கு கிளெயின் லெவின் என்ற விநோத நோய் வந்துள்ளது. இந்த நோய் உள்ளவர்கள் தூங்க ஆரம்பித்தால் பல நாட்கள் தூக்கத்திலேயே இருப்பார்கள். அவர்கள் முழித்து வேலை செய்ய துவங்கினால் சில மணி நேரங்களிலேயே சோர்வாகி மீண்டும் தூங்கச் சென்று விடுவார்கள். உலகிலேயே இந்த வியாதி 40 பேருக்குத் தான் உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஷாரிக் தோஹரும் ஒருவர். இந்த வியாதி உள்ளவர்களுக்கு அந்தந்த நாட்டுச் சுகாதாரத்துறை தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. கடும் தூக்கத்தில் இருக்கும் இவர்களுக்குப் பசி, தாகம் என எதுவுமே தெரியாது ஆனால் சரியான நேரத்திற்குச் சாப்பிடவில்லை என்றால் அவர்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.



அதனால் அவர்கள் தூங்கும் நேரத்தில் உணவைத் திரவப்பொருளாக மாற்றி அவர்கள் உடலுக்குள் செலுத்துவார்கள். மேலும் உடலுக்குத் தேவையான நீரும் செயற்கையாக உடலுக்குள் செலுத்தப்படும் அப்பொழுதுதான் அவர்கள் உயிர் வாழ முடியும். இந்நிலையில் ஷாரிக் தோஹருக்கு அந்நாட்டுச் சுகாதாரத்துறை சார்பில் திரவ உணவும், நரம்பியல் சிகிச்சையும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் திரவ உணவு கடந்த 2 மாதங்களாக வழங்கப்படவில்லை என தோஹாரின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார். தோஹருக்கு இருக்கும் இந்த விநோதமான நோய் தற்போது கொலம்பியா நாட்டு மக்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூக்க மாத்திரை எடுப்பது மனதை பாதிக்குமா? - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
DrRadhika Murugesan  - Sleeping Tablet 

எந்த பிரச்சனையுமே இல்லாமல் தூக்கம் வராமல் இருப்பது பிரைமரி இன்சோம்னியா என்கிறோம். சிலருக்கு அதிகமாக தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டே இருந்து அதற்கு பழகி தூங்க வேண்டுமானால் தூக்க மாத்திரை போட்டே ஆகவேண்டும் என்ற நிலை உருவாவதும், அதிகமான குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதும், அதிகப்படியான மன அழுத்தம் இருந்தாலும் தூக்கம் வராமல் இருக்கும். 

சில மனநோய்கள் உருவாவதற்கு தூக்கமின்மை முக்கிய காரணமாக இருக்கும். மனச்சோர்வு, மனப்பதட்டம், உளவியல் சார்ந்த நோய்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அதன் ஆரம்பத்தில் தூக்கமின்மை சிக்கலில் இருந்து தான் உருவாகும். தூக்கமில்லாமல் இருந்தாலும் மன நோய் உருவாகும், தீவிரமான மன நோய் உருவாகப் போகிறதென்றாலும் தூக்கம் வராமலும் இருக்கும். 

தூங்கி எழுந்ததுமே புத்துணர்ச்சியான மனநிலை இல்லை என்றால் நீங்கள் ஒழுங்காக தூங்கவில்லை என்று அர்த்தமாகும். அப்படியெனில் நீங்கள் சில வாழ்வியல் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சியினை மாலை நேரங்களில் செய்யக்கூடாது, இரவு நேரங்களில் காபி குடிக்க கூடாது, ஆல்கஹால் சுத்தமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. வன்முறைக் காட்சிகள் நிறைந்த சினிமா பார்ப்பதை தவிர்ப்பது, பேய் சார்ந்த நம்பிக்கைகள் இருந்தால் அது போன்ற படங்களைப் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது

மாலையில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, படுக்கை அறையினை, படுக்கையை தூங்குவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும், பெட்டில் உட்கார்ந்து சாப்பிடக்கூடாது, புத்தகங்கள் படிக்க கூடாது, பெட்டிற்கு அருகே சென்றாலே தூங்க வேண்டும் என்கிற அளவிற்கு மனதிற்கு பயிற்சி அளிக்க வேண்டும்

தூக்கமாத்திரையை போட்டுத்தான் தூங்க வேண்டும் என்று நினைப்பதே தவறு. பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துவர்கள் பரிந்துரையின் பேரில் தூக்கமாத்திரை எடுத்துக்கொள்ளுதல் வேறு, நீங்களாகவே மருத்துவரின் பரிந்துரையின்றி தூக்கமாத்திரை எடுத்துக்கொள்ளுதல் மிக மிக தவறாகும். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மெடிக்கலும் தூக்க மாத்திரை கொடுக்க கூடாது என்பது ரூல்ஸ், ஆனால் சிலர் பணம் வாங்கி கொண்டு கொடுத்து விடுகிறார்கள்.

ஓரிரு நாட்கள் தூக்கம் இல்லாமல் இருப்பது என்பது சாதாரண நிலைதான். பத்து நாட்களுக்கு மேல் இந்த பிரச்சனை தொடர்ந்தால் மனநல மருத்துவரை கண்டிப்பாக அணுகுங்கள், அவர்கள் உங்களின் பிரச்சனையை கண்டறிந்து உங்களுக்கு மருந்துகளும், சில பயிற்சிகளும் பரிந்துரைப்பார்கள். நீங்களாகவே தூக்கமாத்திரை எடுத்துக் கொள்வதால் அதற்கு உங்கள் மனமும், உடலும் கண்டிப்பாக பாதிப்படையும்.

Next Story

ஊழியர்கள் தினமும் 30 நிமிடங்கள் தூங்குவதற்கு அனுமதி அளித்த பிரபல நிறுவனம்! 

Published on 09/05/2022 | Edited on 09/05/2022

 

Employees allowed to sleep 30 minutes daily .... Announced by the famous company!

 

ஊழியர்கள் தினமும் 30 நிமிடங்கள் தூங்குவதற்கு அனுமதி அளித்திருக்கிறது பிரபல நிறுவனம். 

 

கர்நாடகா மாநிலம், பெங்களூரூவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரபல நிறுவனமான 'Wakefit' நிறுவனம் தனது ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக,  'Wakefit' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சைதன்யா இராமலிங்க கவுடாவின் அறிவிப்பில், 'Wakefit' நிறுவனத்தின் ஊழியர்கள் மதியம் 02.00 மணி முதல் 02.30 மணியளவில் அலுவலகத்திலேயே தூங்கிக் கொள்ளலாம். இதற்கான வசதியான படுக்கைகளும், சத்தமில்லாத அறையும் உருவாக்கப்பட்டு வருகிறது. 

 

மதிய நேரத்தில் தூங்குவது நினைவு திறன், படைப்பாற்றல் மற்றும் கவனக்கூர்மையை அதிகரிக்கும். நாசாவின் ஆய்வு ஒன்றிலும் 26 நிமிட பகல் நேரத் தூக்கம் உழைப்பாற்றலை 33% அதிகரிப்பதாகத் தெரிவிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் தூங்கும் இடைவேளை அறிவிக்கப்பட்டிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

'Wakefit' நிறுவனத்தின் அறிவிப்பால், அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.