Skip to main content

லிஃப்டில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவன்... சாமர்த்தியமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய சகோதரி...(வீடியோ)

Published on 05/08/2019 | Edited on 05/08/2019

லிஃப்டிற்குள் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை சாமர்த்தியமாக செயல்பட்டு காப்பாற்றிய சிறுமியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

girl saves her brother from an accident

 

 

துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு, அந்த சிறுமிக்கு பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள லிஃப்டிற்குள் சிறுவர்கள் 3 பேர் உள்ளே நுழைகின்றனர். அதில் ஒரு சிறுவன் தன் கழுத்தில் கயிறை சுற்றியபடி லிஃப்டிற்குள் வந்துள்ளான். நீளமான அந்த கயிறு பாதி லிஃப்டிற்கும் வெளியே இருந்துள்ளது. இதனை 3 சிறுவர்களும் கவனிக்காத நிலையில் லிஃப்ட் கீழ்நோக்கி சென்றுள்ளது. அப்போது சிறுவன் கழுத்தில் இருந்த கயிற்றின் மற்றோரு பக்கம் மேல்தளத்திலேயே சிக்கியுள்ளது. இதனால் அந்த சிறுவன் மேலே தூக்கப்பட்டு, கழுத்தில் கட்டப்பட்ட கயிறுடன் தொங்கியுள்ளான்.

அப்போது விரைந்து சென்ற அந்த சிறுமி, சிறுவனை தூக்கியவாறே லிஃப்டின் அவசர மணியை அழுத்தினார். உடனடியாக லிஃப்ட் நிறுத்தப்பட்டு கதவு திறக்கப்பட்டது. இதனால் சிறுவன் அதிருஷ்டவசமாக உயிர் பிழைத்தான். சிறுமி தனது சகோதரனை காப்பாற்றிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை சரியாக கவனிக்க வேண்டுமென்ற கருத்தும் அதனுடன் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story

"கடவுளின் கோபத்திற்கு இஸ்ரேல் ஆளாகும்" - நாடாளுமன்றத்தில் எம்.பியின் கடைசி உரை

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
turkey MP who lost his lives while speaking in Parliament about criticized israel

துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் ஹசன் பிட்மெஸ் (53). இவர், அந்த நாட்டிலுள்ள இஸ்லாமிய ஃபெசிலிட்டி கட்சியில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி அன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அதில், இஸ்ரேலுடனான துருக்கி ஆளும் கட்சியின் உறவை விமர்சித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

சுமார் 20 நிமிடங்கள் தொடர்ந்து பேசிய அவர், திடீரென்று மயங்கிக் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதறினர். அதன் பின்பு, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் பிட்மெஸுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளித்தும் அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்” என்று கூறினர். நாடாளுமன்றத்தில் அவர் தனது கடைசி உரையாக “வரலாற்றிலிருந்து தப்பித்தாலும், கடவுளின் கோபத்தில் இருந்து தப்பிக்க முடியாது” என்று துருக்கி ஆளுங்கட்சியையும் இஸ்ரேலையும் விமர்சித்துப் பேசி தனது உரையை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.