Advertisment

சிறுமி எரித்துக் கொலை!!!

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் எட்டு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அந்த மாகாணம் முழுவதும்அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாலியல் பலாத்காரம் செய்தவர் யார்என்று கண்டிடுபிடித்து கைது செய்யுமாறு மக்கள் போராட்டம் நடத்தினர்.

Advertisment

Girl burning

லாகூரிலிருந்து 200 கீ.மீ தொலைவில் உள்ள சாய்வால் மாவட்டத்தில் சிச்சாவட்னி மக்கள் சாலையை மறித்து போராட்டத்தை நடத்தினர். சந்தேக நபரைகைது செய்துவிட்டோம் என்று போலீசார் சொன்ன பிறகுதான் மக்கள் கூட்டம் கலைந்தது.

இது குறித்து போலீசார் தெரிவித்தது:

சிச்சாவட்னி அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துவந்த சிறுமி கடந்த ஞாயிறு அன்று கடைக்கு சென்றவள் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் தேடியுள்ளனர். ஒரு தெருவின் ஓரத்தில் எரிந்த நிலையில் இருந்த சிறுமியின் உடலை லாகூரில் உள்ள ஜின்னா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் 70% உடல் கருகிவிட்டது முடிந்த வரை சிகிச்சை அளிக்கிறோம் என்றார்கள்.மேலும் மருத்துவ அறிக்கைபடி சிறுமி கற்பழித்து எரிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது நாங்கள் சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைது செய்துள்ளோம்.

Advertisment

இதேபோன்ற சம்பவம் சில நாட்கள் முன்பு அதே பஞ்சாப் மாகாணத்தில் ஏழு வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார்

Pakistan Rape women safety
இதையும் படியுங்கள்
Subscribe