தொழில்நுட்ப துறையில் நூற்றாண்டுகாலமாக முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் ஐ.பி.எம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியர் ஒருவர் பொறுப்பேற்க உள்ளார்.

Advertisment

Ginni Rometty stepped down as ibm ceo and indian origin arvind krishna to replace her

108 ஆண்டுகளாக தொழில்நுட்ப உலகில் அசைக்கமுடியாத நிறுவனமாக திகழ்ந்து வருவது ஐ.பி.எம் நிறுவனம். இதன் தலைமை செயல் அதிகாரியாக இருந்த கின்னி ரோமேட்டி பதவி விலகும் நிலையில், அவரது இடத்திற்கு இந்தியாவை சேர்ந்த 57 வயதான அரவிந்த் கிருஷ்ணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கான்பூர் ஐ.ஐ.டி பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் பிரிவில் பட்டம்பெற்ற அவர், 1990 ஆம் ஆண்டு டாக்டரேட் பட்டம் பெற்றார்.

அதே ஆண்டே ஐ.பி.எம் நிறுவனத்தில் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா சுமார் 30 ஆண்டுகாலம் அந்நிறுவனத்தின் வெவ்வேறு துறைகளில் பணியாற்றி, கடந்த ஆண்டு முதல் ஐபிஎம் கிளவுட் மற்றும் அறிவாற்றல் மென்பொருளுக்கான மூத்த துணைத் தலைவராக பொறுப்பேற்றார். இதனையடுத்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த கின்னி ரோமேட்டி பதவி விலகும் நிலையில், வரும் ஏப்ரல் மாதம் அரவிந்த் கிருஷ்ணா தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.