நியூஸிலாந்து நாட்டில் 1 கோடியே 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத கிளியின் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Advertisment

giant parrot existed 19 million years ago

சுமார் 3.5 அடிஉயரமும் 7 கிலோவுக்கு மேல் எடையும் கொண்டதாக இந்த கிளி இருந்திருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பல்கலைக்கழக போராசிரியரும், புதைபடிவ நிபுணருமான ட்ரெவர் வொர்த்தி, நியூசிலாந்தின் தெற்கு பிராந்தியமான ஒட்டாகோவில் புதைபடிவ ஆய்வு பணியில் ஈடுபட்டபோது இந்த படிமத்தை கண்டறிந்துள்ளார்.

கிளியின் அசாதாரண உயரம் மற்றும் வலிமையை பறைசாற்றும் வகையில் அந்த கிளிக்கு ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ் என பெயரிட்டுள்ளது. மேலும் கண்டெடுக்கப்பட்ட புதை படிமங்களை வைத்து அந்த கிளி எப்படி இருந்திருக்கும் என்ற மாதிரி படம் ஒன்றையும் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.