germany

Advertisment

கடந்த வருடம் பரவத்தொடங்கிய கரோனா பெருந்தொற்று, தற்போது வரை உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளில் நாடு முழுவதுமான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும், பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில்கரோனாதொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுவருவதால், வரும் மார்ச் 28 ஆம் தேதி வரை அமலில் இருக்குமெனஅறிவிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது ஏப்ரல் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈஸ்டர் பண்டிகையொட்டி ஏப்ரல் மாத தொடக்கத்தில் விடுமுறை என்பதால், ஏப்ரல் 1-5 வரை கடுமையான ஊரடங்கு பின்பற்றப்படும் என அந்தநாடு அரசு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1 முதல் 5 ஆம் தேதி வரையிலான ஊரடங்கின்போது, பொதுமக்கள் கூடுவது, கடைகளை திறப்பது உள்ளிட்டவை தடை செய்யப்படுவதாக ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது. ஜெர்மனியில் மரபணுமாற்றமடைந்த (இங்கிலாந்து வகை) கரோனாபரவுவதால், அங்கு கரோனா பரவல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.