Advertisment

550 ஆண்டுகள் பழமையான இசைக்குழு மீது வழக்கு தொடர்ந்த சிறுமி...

554 ஆண்டுகள் பாரம்பரியமுள்ள இசை குழு ஒன்றின் மீது சிறுமி ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் ஜெர்மனி நாட்டில் நடந்துள்ளது.

Advertisment

German girl sues boys choir for gender discrimination

ஜெர்மனியின் பெர்லின் நகரில் தேவாலயத்தில் பாடும் கதீட்ரல் இசைக்குழு 1465 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இசைக்குழுவில் ஆண்கள் மட்டுமே பாடல்கள் பாடுவது வழக்கம். இந்த நிலையில் பெர்லின் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் இந்த இசைக்குழுவில் சேர விண்ணப்பித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இவருக்கு ஆடிஷன் நடந்தது. அந்த ஆடிஷனில் சிறப்பாக செயல்பட்டும் அவர் அந்தக் குழுவில் சேர்க்கப்படவில்லை.

இது குறித்து காரணம் கேட்டபோது, பெண் என்பதால் அவரை சேர்க்கவில்லை என இசைக்குழு நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பெண்ணுரிமை பேசும் இந்த காலத்தில் பெண் என்பதால் இசைக்குழுவில் சேர்க்க மறுப்பதாக கூறி அந்த சிறுமி தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

berlin germany
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe