அமைதியான முகத் தோற்றம் இருந்தால் ரூ.91 லட்சம் தருகிறோம்... இணையத்தில் வைரலாகும் விளம்பரம்...

அமைதியான முகத் தோற்றம் இருந்தால், அவரது முகத்தை ரோபோ தயாரிப்பில் பயன்படுத்துவதோடு, யாருடைய முகம் பயன்படுத்தபடுகிறதோஅவருக்கு ரூ.91 லட்சம் பணம் தரப்படும் என்ற விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

geomiq ad goes viral in social media

லண்டனை சேர்ந்த Geomiq.com என்ற இணையதளத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ரோபோ தயாரிப்பு நிறுவனம் ஒன்று, விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த விளம்பரத்தில், முதியவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் தங்கள் நிறுவனம் ரோபோக்களை தயாரிக்க உள்ளதாகவும், எனவே அதற்கேற்றாற் போல அமைதியான முகத் தோற்றம் உடையவர்களின் முகத்தை மாடலாக பயன்படுத்தப்போவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் அவ்வாறு Model-ஆக பயன்படுத்தப்படுபவர்களுக்கு இந்திய மதிப்பில் 91 லட்சம்வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறது. ஒப்பந்தங்கள் இன்னும் முழுமையடையாததால், நிறுவனத்தின் பெயர் உள்ளிட்ட தகவல்களை Geomiq நிறுவனம் அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது. அதேநேரம் ரோபோ உருவாக்க மனித முகத்தை மாடலாக கேட்பதும், அதற்கு பணம்கொடுப்பதும் மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

hongkong london robot
இதையும் படியுங்கள்
Subscribe