Skip to main content

அமைதியான முகத் தோற்றம் இருந்தால் ரூ.91 லட்சம் தருகிறோம்... இணையத்தில் வைரலாகும் விளம்பரம்...

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

அமைதியான முகத் தோற்றம் இருந்தால், அவரது முகத்தை ரோபோ தயாரிப்பில் பயன்படுத்துவதோடு, யாருடைய முகம் பயன்படுத்தபடுகிறதோ அவருக்கு ரூ.91 லட்சம் பணம் தரப்படும் என்ற விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

geomiq ad goes viral in social media

 

 

லண்டனை சேர்ந்த Geomiq.com என்ற இணையதளத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ரோபோ தயாரிப்பு நிறுவனம் ஒன்று, விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த விளம்பரத்தில், முதியவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் தங்கள் நிறுவனம் ரோபோக்களை தயாரிக்க உள்ளதாகவும், எனவே அதற்கேற்றாற் போல அமைதியான முகத் தோற்றம் உடையவர்களின் முகத்தை மாடலாக பயன்படுத்தப்போவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் அவ்வாறு Model-ஆக பயன்படுத்தப்படுபவர்களுக்கு இந்திய மதிப்பில் 91 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறது. ஒப்பந்தங்கள் இன்னும் முழுமையடையாததால், நிறுவனத்தின் பெயர் உள்ளிட்ட தகவல்களை Geomiq நிறுவனம் அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது. அதேநேரம் ரோபோ உருவாக்க மனித முகத்தை மாடலாக கேட்பதும், அதற்கு பணம்கொடுப்பதும் மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆடம் 'ஸ்ட்ராங்கா ஒரு டீ போடு'- அட இதற்கும் ரோபோவா 

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Adam 'Stronga Put a Tea' - Oh Robo for this too

தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் இந்த நவீன காலகட்டத்தில் சிறு சிறு விஷயங்களை கூட மனித உழைப்பை குறைத்து தொழில்நுட்பத்தை வைத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உலகெங்கும் பெருகி வருகிறது. அந்த வகையில் அண்மையாக வீட்டு வேலைகளை செய்வதற்காக ரோபோக்கள் உருவாக்கப்பட்டது. சமீபத்தில் ஹோட்டலில் சர்வர்களுக்கு பதிலாக ரோபோக்கள் உணவை பரிமாறும் வீடியோ காட்சிகளும் வெளியாகியது.

இந்நிலையில் அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில் காபி, டீ உள்ளிட்ட பானங்களை ரோபோ ஒன்று தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. நெவாடா மாகாணம் பேரடைஸ் நகரை சேர்ந்த 'ரிச் டேக் ரோபாட்டிக்ஸ்' என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பிரத்தியேக ரோபோ டீக்கடைக்காரரைப் போல ஒரு கோப்பையை எடுத்து நன்கு தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு, மனிதர்களைப் போலவே காபி, டீ ஆகியற்றை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறது. காபி மட்டுமல்லாது ஐஸ் டீ, காக்டெயில் மது உள்ளிட்ட பானங்களையும் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

இந்த ரோபோவிற்கு ஆடம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் குவிந்து கொண்டு ரோபோ ஆடம்மிடம் டீ, காபி ஆர்டர் செய்து வாங்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

இந்திய மக்களை உளவு பார்க்கும் மோடி அரசு;  வெளியான அதிர்ச்சி தகவல்

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

Modi government spying on Indian people

 

140 கோடி இந்திய மக்களின் தரவுகள் மற்றும் தகவல்தொடர்புகளை  மோடி அரசு கண்காணிப்பு கருவிகளை கொண்டு  உளவு பார்த்து வருவதாக லண்டனில் உள்ள ஆங்கில பத்திரிக்கை ஒன்று குற்றச்சாட்டு வைத்துள்ளது.

 

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு, எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய தொழிலதிபர்கள் ஆகியோரின் செல்போனில் இருந்து  அவர்களின் தரவுகளை மோடி அரசு உளவு பார்த்து வருவதாக பரபரப்பு புகார் எழுந்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை இஸ்ரேலில் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி உளவு பார்ப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்த குற்றச்சாட்டை மோடி தலைமையிலான மத்திய அரசு மறுத்துவிட்டது. 

 

இதற்கிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் செல்போனை மோடி அரசு ஒட்டுக்கேட்பதாகவும்,  ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்திருந்தார். மேலும், அப்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் எதிர்க்கட்சியினர் பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு மோடி அரசு பதில் எதுவும் தெரிவிக்காமல் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தது.

 

இந்த நிலையில், லண்டனில் உள்ள பைனான்ஸ் டைம்ஸ் என்ற ஆங்கில பத்திரிகை ஒன்றில், இந்தியாவில் உள்ள 140 கோடி இந்தியர்களையும் மோடி அரசு உளவு பார்ப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இஸ்ரேலை தலைமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் செப்டியர் மற்றும் காக்னைட் என்ற நிறுவனத்திடமிருந்து மோடி அரசு அதிநவீன உளவுக் கருவி வாங்கியுள்ளது. அந்தக் கருவிகளை கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் மற்றும் கண்காணிப்பு உபகரணங்களில் பொறுத்தி மக்களின் தரவுகள் திருடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. அதை வைத்து, ஒட்டுமொத்த 140 கோடி இந்திய மக்களின் செல்போன் அழைப்புகள், வாட்ஸ்அப் செய்திகள், குறுந்தகவல்கள், ஈ.மெயில்கள், ஆகிய தரவுகள் திருடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

அதேபோல், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் இணைய தகவல்கள் முதற்கொண்டு இந்த கருவி முலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் நாட்டின் செப்டியர் நிறுவனம் தனது உளவு பார்க்கும் தொழில்நுட்பத்தை  முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா, மற்றும் சிங்கப்பூரின் சிங்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு விற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.