Advertisment

தூத்துக்குடி தியாகி 'ஸ்னோலின்' பெயரில் நுழைவாயில்! காஷ்மீர் குழந்தை 'ஆஃசிபா' பெயரில் அரங்கம்!

mkp

Advertisment

ஐக்கிய அரபு அமீரகம் துபையில் மனிதநேய கலாச்சார பேரவை (MKP)யின் சார்பில் நோன்பு துறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வு நடைபெற்ற அரங்கத்தின் நுழைவாயிலுக்கு தூத்துக்குடியில் 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிராக போராடிய 13 பேரில், வாயில் துப்பாக்கி சூட்டுக்கு ஆளாகி உயிர் துறந்த 17 வயது சகோதரி 'ஸ்னோலின்' பெயரை சூட்டியிருந்தனர்.

அதுபோல, அரங்கத்திற்கு பாஜகவினரால் காஷ்மீரில் கூட்டுக் கற்பழிப்புக்கு ஆளாகி இறந்த அன்பு குழந்தை ஆஃசிபாவின் பெயரை சூட்டியிருந்தனர்.

Advertisment

mkp

நோன்பு துறப்புக்கு முன்பாக, தூத்துக்குடி ஸ்டைர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிர் துறந்த தியாகிகளுக்கு மரியாதை செய்யும் வகையில் 1 நிமிடம் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.

இந்த மூன்று நிகழ்வுகளும் தேசத்தை கடந்து வாழும் இந்தியர்களிடம் ஏற்பட்டிருக்கும் வலிமையான அரசியல் தாக்கத்தை உணர்த்தும் வகையில் இருந்தது.இந்நிகழ்ச்சியில்'இறைவனிடம் கையேந்துங்கள்' என்ற பாடலை தோப்புத்துறை ஹாஜா பாடி பரவசப்படுத்தினார்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று தமிழக அரசியல் குறித்து சிறப்புரையாற்றினார்கள். பிறகு துண்டு சீட்டுகள் மூலம் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

mkp

தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் வருகை தந்து தமிமுன் அன்சாரியை சந்தித்து அவரது சட்டமன்ற பணிகளுக்கு வாழ்த்து கூறினர். 6 மணிக்கெல்லாம் கூட்ட அரங்கம் நிறைந்து. அரங்கத்திற்கு வெளியில் மக்கள் திரண்டிருந்தனர். நோன்பு துறப்பதற்கு ஏற்பாடு செய்திருந்த அரங்கிலும் மக்கள் உட்கார்ந்திருந்தனர். பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.

7 மணி நெருங்கியதும் அந்த ஹோட்டலில் எல்லா பகுதிகளிலும் இளைஞர்கள் கூட்டம் நிரம்பியது.பிறகு நோன்பு துறப்பு நடைப்பெற்றதோடு, ஒரே நேரத்தில் திரண்ட மக்களுக்கு, மனிதநேய கலாச்சார பேரவை தொண்டர் அணியினர் உடனடியாக கூடுதல் உணவுப் பொருள்களை வரவழைத்து வினியோகித்தனர்.

ashifa Gateway Snowlin Stadium
இதையும் படியுங்கள்
Subscribe