பிரேசிலை சேர்ந்த தாதா கூட்ட தலைவர் ஒருவர் தன்னுடைய மகள் போல வேடமிட்டு அதிக பாதுகாப்புள்ள சிறையிலிருந்து தப்பிக்க பார்த்து போலீஸிடம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

brazil

Advertisment

Advertisment

க்ளவினோ டா சில்வா என்ற 42 வயது தாதா தன்னுடைய 19வயது மகள் போல நீள தலைமுடி, ஸ்கின், பிங்க் டீ ஷர்ட் போன்றவற்றை ஒப்பனை செய்துகொண்டு கடந்த சனிக்கிழமை ரியோ சிறையிலிருந்து தப்பிக்க பார்த்துள்ளார்.

சிறையில் இருப்பவர்களை பார்க்க வரும் தன் மகளை சிறையில் ஒரு பகுதியில் விட்டுவிட்டு அவரை போல வேடமிட்டிருக்கும் இந்த தாதா சிறையிலிருந்து தப்பி நினைத்துள்ளார். ஆனால், அவர் வெளியேறும்போது அங்கிருந்த காவலருக்கு அவர் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் நிறுத்தி வைத்து பரிசோதிக்கும்போது மிகப்பெரிய தாதா க்ளவினோ என்று தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர் போட்டிருக்கும் வேடத்தை எடுக்க சொல்லி அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது பிரேசில் போலீஸ். தப்பிக்க நினைத்ததால் அவரை வேறு ஒரு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/uxsU_RDyUwc.jpg?itok=hosYHOZk","video_url":" Video (Responsive, autoplaying)."]}