ADVERTISEMENT

ஜி 20 உச்சி மாநாடு; சீன அதிபர் புறக்கணிப்பு?

07:58 PM Aug 31, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜி 20 அமைப்பின் உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி 20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ஜி - 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி - 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். அதன்படி செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 4 நாள் பயணமாக இந்தியாவிற்கு வர உள்ளார். செப்டம்பர் 10 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின், நாடு திரும்ப உள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இவருக்கு பதிலாக சீன பிரதமர் லி கியாங்க் பங்கேற்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக உக்ரைனில் மனித உரிமை மீறல் தொடர்பாக புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதன் காரணமாக ஜி 20 அமைப்பின் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT