Funeral for Shane Warne in Melbourne!

மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு இறுதிச் சடங்கு மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.

Advertisment

கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சூழல் பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, கடந்த மார்ச் 4- ஆம் தேதி அன்று தாய்லாந்தில் காலமானார். அவரது உடல் ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்பட்ட நிலையில், மெல்போர்னில் இன்று (20/03/2022) இறுதிச் சடங்கு நடைபெற்றது. தனிப்பட்ட முறையில் நடந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஷேன் வார்னேவின் மனைவி, பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 80 பேர் மட்டுமே கலந்துக் கொண்டனர். குறிப்பாக, அவரது, நெருங்கிய நண்பர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஆலன் பார்டர், மார்க் டெய்லர், மைக்கேல் வான் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisment

இதற்கிடையே, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் ஒரு பகுதிக்கு ஷேன் வார்னேவின் நினைவாக, அவரது பெயர் சூட்டப்பட உள்ளது.