எரிபொருள் ஏற்றி வந்த லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி வெடித்ததில் அதன் அருகில் இருந்த 76 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisment

fuel tanker accident in niger

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ஆப்பிரிக்க நாடான நைஜரில் டேங்கர் லாரி ஒன்று எரிபொருள் ஏற்றி வந்துள்ளது. ரயில் பாதைக்கு அருகில் வண்டியை ஓட்டுநர் திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்துள்ளது. லாரி கவிழ்ந்ததும் அதிலிருந்து எரிபொருள் வெளியேறியுள்ளது. இதனை கண்ட அங்கிருந்த மக்கள் எரிபொருளை சேகரிக்க விரைந்துள்ளனர். அப்போது அந்த லாரி மிகப்பெரும் சத்தத்துடன் வெடித்துள்ளது.

இதில் அதன் அருகில் இருந்த மக்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்தில் 76 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 40 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தால்அப்பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் கடைகள் இடிந்து நாசமாகின. இந்த விபத்தின் காரணமாக வரும் புதன் முதல் வெள்ளி வரை அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment