மாலியில் இரு பிரான்ஸ் ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 அதில் பயணித்த வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த 2012ஆம் ஆண்டு மாலி நாட்டின் வடக்குப் பகுதியை அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதக் குழுக்கள் கைப்பற்றின. அவர்களை மாலி ராணுவம் பிரான்ஸ் ராணுவத்தின் உதவியுடன் விரட்டியது. அதிலிருந்து அந்நாட்டில் தொடர்ந்து பயங்கரவாத்த் தாக்குதல்கள் நிகழ்ந்துவருகின்றன.
அந்த பயங்கரவாதக் குழுக்களை அழித்து அமைதியை நிலைநாட்ட, மாலி மற்றும் பிரான்ஸ் ராணுவப் படைகள் இணைந்து செயல்படுகின்றன. மாலி நாட்டின் வடக்கு எல்லைப் பகுதியில் இரண்டு பிரான்ஸ் ராணுவ ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இரண்டு ஹெலிகாப்டர்களும் மோதி விபத்துக்குள்ளாயின.