emmanuvel macron

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கரோனா தொற்று, உலக நாடுகளின் தலைவர்களையும் விட்டுவைக்கவில்லை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் கரோனா தொற்றின் பாதிப்புக்குள்ளாகி மீண்டுள்ளனர்.

Advertisment

இந்தநிலையில், ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனா தொற்றின் அறிகுறிகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு நடைபெற்ற சோதனையில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

Advertisment

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் இமானுவேல் மேக்ரான், ஏழு நாள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்றும், தனிமையிலிருந்தபடியே தொடர்ந்து தனது பணிகளைக் கவனிப்பார் என்றும் ஃபிரான்ஸ் நாட்டின் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.